spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபீகார் போன்ற சூழல் தமிழ்நாட்டில் வரக்கூடாது - செந்தில் பாலாஜி...!

பீகார் போன்ற சூழல் தமிழ்நாட்டில் வரக்கூடாது – செந்தில் பாலாஜி…!

-

- Advertisement -

பீகார் தேர்தலில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும் … தமிழ்நாட்டில் அப்படி ஒரு சூழல் வந்துவிடக்கூடாது என முதல்வர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என செந்தில் பாலாஜி  தெரிவித்துள்ளாா்.பீகார் போன்ற சூழல் தமிழ்நாட்டில் வரக்கூடாது - செந்தில் பாலாஜி...!

கோவை மாநகர் திமுக சார்பில் வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ”என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற செயற்குழு பயிற்சி கூட்டம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில்பாலாஜி, முதல்வரின் வழிகாட்டுதலின்படி இந்த நிகழ்வுகள் கோவையில் நடைபெற்று, கடந்த சட்டமன்றத் தேர்தலை விட அதிகமான வாக்குகளை பெறுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

we-r-hiring

SIR (Special Intensive Revision)யை பொறுத்தவரை முதல்வர் தொடர்ந்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார். பீஹார் தேர்தலில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும் அது போன்ற ஒரு சூழல் தமிழ்நாட்டில் வந்து விடக்கூடாது. அவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளை தி.மு.கவும் தி.மு.க தலைவரும் அனுமதிக்க மாட்டார்கள். சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) பொறுத்தவரை தி.மு.க மிக கவனமாக கையாண்டு வருகிறது என்று குறிப்பிட்டாா்.

தேவர் ஜெயந்தி விழாவில் ஓ.பி.எஸ், செங்கோட்டையன், தினகரன் ஆகியோர் பேசியது தொடர்பான கேள்விக்கு, ”உட்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்வது சரியாக இருக்காது. எங்களைப் பொறுத்தவரை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார்.

ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் இங்கு வரும்பொழுது புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார், பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார். நீண்ட நாள் கோரிக்கையான தங்க நகை தொழிலாளர்களின் பூங்கா கோரிக்கை தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு கூடிய விரைவில் அந்த கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்தாா்.

அவிநாசி மேம்பாலத்தை பொருத்தவரை அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 80 கோடி மட்டும்தான் செலவழித்து பணிகளை செயல்படுத்தும் திட்டத்தில் இருந்தார்கள். பின்னர் அதிலிருந்த பல்வேறு வழக்குகளை முடித்து 1800 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறும் வகையில் அந்த தேர்தல் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

தமிழக வெற்றி கழகம் தொடர்பான கேள்விக்கு, ”எங்களுடைய கட்சிகளைப் பற்றியும் எங்களுடைய செயல்பாடுகளை பற்றியும் கேளுங்கள். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளது ஒவ்வொரு கட்சியும் அவர்களது வேலையை செய்வார்கள். மற்ற அரசியல் கட்சிகள் என்ன வேலை செய்கிறார்கள் என்று பார்ப்பது எங்களுடைய வேலை அல்ல என்று தெரிவித்தார். எங்களைப் பொறுத்தவரை திட்டங்களை நாட்டு மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.”

கோவையில் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாய் இருக்கிறது என்ற கேள்விக்கு, ”ஒரு சாலையின் ஆண்டு காலம் என்பது ஐந்து ஆண்டு காலம். கடந்த ஆட்சியில் சாலைகள் போடப்பட்டிருந்தால் இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சாலை போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் சாலைகள் போடாததால் தற்பொழுது சாலைகள் போடப்பட்டு வருவதாகவும், விடுபட்ட சாலைகளும் தேர்தலுக்கு முன்பு போடப்பட்டு விடும் என கூறியுள்ளாா்.

அவிநாசி மேம்பாலம் விஷயத்தில் 50 சதவிகிதம் பணிகளை அதிமுக தான் முடித்தது என்று அதிமுகவினர் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு, ”1800 கோடியில் 50 சதவிகிதம் என்பது 80 கோடி தானா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் அந்த பாலத்திற்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டது என்று அவர்கள் ஆதாரத்துடன் கூறினால் நான் அதற்கு பதில் அளிக்கிறேன் என தெரிவித்துள்ளாா்”.

ஆட்டு குட்டியுடன் இருசக்கர வாகனம் வாங்க வந்த விவிசாயி… வீடியோ வைரல்…

MUST READ