spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நியமிக்கவும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து, உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.  இதனையொட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர்களுடன் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

we-r-hiring

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில, நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை தமக்கு அளித்த திமுக தலைவரும்,  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, பொதுச்செயலாளர் – பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MUST READ