Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்டாலினின் பேச்சு திமுக மிரண்டுபோய் இருப்பதை காட்டுகிறது - ஜெயக்குமார் விமர்சனம்..

ஸ்டாலினின் பேச்சு திமுக மிரண்டுபோய் இருப்பதை காட்டுகிறது – ஜெயக்குமார் விமர்சனம்..

-

திமுக மிரண்டுபோய் இருப்பதையே மு.க.ஸ்டாலினின் பேச்சு காட்டுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்றி காலை திமுக நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அ.தி.மு.க. பலிகடா ஆகப்போவது தெரியாமல் அதனை ஆதரித்திருப்பதாக கூறினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இதற்கு பதிலளித்துப் பேசினார். அவர் கூறியதாவது, “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். தி.மு.க. மிரண்டு போய் இருப்பதையே மு.க.ஸ்டாலினின் பேச்சு உணர்த்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயமாகும். நேர விரயம், மனித சக்தி வீணடிப்பது இதையெல்லாம் கருத்தில் கொண்டே முடிவை எடுத்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவினங்கள் குறையும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது. 1982-ல் இருந்தே ஒரே தேர்தல் கோஷம் இருந்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு அனுமதி அளித்துள்ளோம். அந்த வகையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்தோம். இதை வரவேற்பதில் தி.மு.க. வுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை” என்று கூறினார்.

MUST READ