சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராமை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள கே.ஆர்.ஸ்ரீராமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது.
இந்நிலையில், கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அவருக்கு தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதேபோல், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 கூடுதல் நீதிபதிகளை நியமித்தும், குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், டெல்லி, இமாச்சல், கேரளா உள்ளிட்ட 8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.