ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா இன்று ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர். அவர்களில் திருவேங்கடம் என்பவர் போலிசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். மற்றவர்களில் 25 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடி குண்டு சப்ளை செய்த புகாரில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு டெல்லியில் நேற்று தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி சீசிங் ராஜா இன்று ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.