spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் உத்தரவு

மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் உத்தரவு

-

- Advertisement -

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களை‌ கண்காணிக்கவும், செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை, கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை மாவட்டத்திற்கு ஆனந்த், சென்னை மாவட்டத்திற்கு பி.என்.ஸ்ரீதர்,  காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கந்தசாமி, மதுரை மாவட்டத்திற்கு அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

we-r-hiring

tamilnadu assembly

இந்த கண்காணிப்பு அதிகாரிகள் தங்களுக்கு ஓதுக்கப்பட்ட மாவட்டங்களில் அரசின் திட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள் என்றும், கண்காணிப்பு அதிகாரிகள் மாதத்திற்கு ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். மேலும், கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறைக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

MUST READ