spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு12 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி சாதனை

12 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை – ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி சாதனை

-

- Advertisement -

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 12 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து தனியார் ஆஸ்பத்திரியை விட சாதனை செய்துள்ளது.

12 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி சாதனை

we-r-hiring

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக கடந்த ஒரே ஆண்டில் 12 பேருக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

30 லட்சம் முதல் 70 லட்சம் வரை செலவாகும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

12 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி சாதனை

மனித உடலில் அதிக எடை கொண்ட உள்ளுறுப்பாக செயல்படுவது கல்லீரல். சராசரியாக 1.4 கிலோ முதல் 1.6கிலோ வரை எடை கொண்டவையாக உள்ளது. இதன் முக்கிய செயல்பாடு நாம் உண்ணும் உணவுகளில் தேவையான சுரப்பிகளை சுரந்து அந்தந்த உறுப்புகளுக்கு வழங்கும் தன்மை கொண்டவை.

அதனால் சமீப காலமாக கல்லீரல் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. உலக அளவில் 300 மில்லியன் மக்கள் கல்லீரல் பாதிப்போடு வாழ்வதாகவும், 1.34 மில்லியன் மக்கள் இந்த பாதிப்பால் உலக அளவில் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

12 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி சாதனை

அதிக கல்லீரல் பாதிப்புடையோர் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதனால் கல்லீரல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்ற அடிப்படையில், கல்லீரல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் கல்லீரல் பாதிப்பு குறித்து விளக்கும் வகையில் கண்காட்சி மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்டது.

கல்லீரல் நமது உடலின் மிக முக்கிய பங்கும் வகிக்கும் உறுப்பாக இருக்கிறது. ஆனால் அதன் முக்கியத்துவம் அறியாமல் உணவு பழக்கவழக்கம் மாறிப்போனதால் அதிகமானோருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதாகவும், போதை பழக்கம், மது பழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு வரை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில் போலீசுக்கு டிமிக்கி – அதிர்ச்சி தகவல்

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தனியாருக்கு நிகராக அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் இதுவரை, புறநோயாளிகளாக 37,340 பேரும், உள்நோயாளிகளாக 21,900 பேரும் சிகிச்சைகள் பெற்றதோடு, 12பேருக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என மருத்துவமனையின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மாறிப்போன உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டு நோயில்லா வாழ்வை வாழ முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

MUST READ