spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில் போலீசுக்கு டிமிக்கி - அதிர்ச்சி தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில் போலீசுக்கு டிமிக்கி – அதிர்ச்சி தகவல்

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில் போலீசுக்கு டிமிக்கி - அதிர்ச்சி தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி சம்போ செந்திலை 10 தனிப்படைகள் அமைத்து தேடி வரும் போலீஸார் சம்போ செந்தில் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து எப்படி? என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள சம்போ செந்திலின் கூட்டாளிகள் அவருடன் பேசுவதற்காக பிரத்யேக செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும், கூட்டாளியின் பிரத்யேக செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் சம்போ செந்தில், அவர்களின் சொந்த மொபைல் மூலம் விரும்பும் நபருக்கு போன் செய்து லவுடு ஸ்பீக்கரில் பேசுவதும் தெரிய வந்தது.

we-r-hiring

இப்படி பேசினால் சம்போ செந்தில் யாருடன் தொடர்பு கொள்கிறார் என்ற விவரங்களை பெற இயலாது என்று போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

வி.பி.என். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே தனது கூட்டாளிகளுடன் சம்போ செந்தில் பேசி வருவதும் விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.

இணையத்தில் ரிவ்யூ கொடுங்க பணம் சம்பாதிங்க என கூறி லட்சக்கணக்கில் மோசடி

தினந்தோறும் மதிய வேலைக்கு பிறகே கூட்டாளிகளுடன் பேசி வரும் சம்போ செந்தில் வெளிநாட்டில் இருந்து கொண்டு அந்த நாட்டின் நேரத்திற்கு ஏற்றாற்போல் சம்போ செந்தில் பேசுகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம், டெலிகிராம் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி சம்போ செந்திலுடன் தொடர்பு கொண்ட நபர்களின் முழு விவரங்களையும் போலீசார் கேட்டுள்ளனர்.

MUST READ