
தமிழகத்தில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று (நவ.04) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டும் மழையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.04) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று (நவ.04) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவீன எரிவாயு மேடையில் எரியூட்டப்பட்ட மருத்துவ மாணவரின் உடல்!
அதேபோல், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் நாளை (நவ.05) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.” இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.