Homeசெய்திகள்தமிழ்நாடுதிருத்தணிக்கு சரக்கு வேனில் கடத்திவந்த 2 டன் செம்மரக்கட்டை பறிமுதல் - இருவர் கைது

திருத்தணிக்கு சரக்கு வேனில் கடத்திவந்த 2 டன் செம்மரக்கட்டை பறிமுதல் – இருவர் கைது

-

ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 2 டன் அளவிலான செம்மரக்கட்டைகளை போலிசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு சரக்கு வாகனத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது,  ஆந்திராவில் இருந்து வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை போலீசார் சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனையிட்டனர். அப்போது, வேனில் சுமார் 2 டன் அளவிலான  17 செம்மரக்கட்டைகளை கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக செம்மரங்களை கடத்திவந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ஜோதிஸ்வரன்,  கணேசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

MUST READ