spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்திற்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து 200 கன அடி தண்ணீா் திறப்பு

தமிழகத்திற்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து 200 கன அடி தண்ணீா் திறப்பு

-

- Advertisement -

முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழக விவசாய நிலங்களுக்கு 200 கன அடி தண்ணீா் பொதுப்பணித்துறை பொறியாளர் திறந்து வைத்தாா்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முதல் போகத்திற்கு குறித்த நேரத்தில் ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

we-r-hiring

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதுதேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.

தென் தமிழக மக்களின் ஜீவாதரணமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை.

இந்த முல்லைப் பெரியாறு அணை தண்ணீரினை பயன்படுத்தி  தேனிமாவட்டத்தில் கூடலூர், கம்பம்,உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி, தேனி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

அணையில் 112 கன அடி தண்ணீர் இருந்தால் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14,707 ஏக்கரில் முதல் போக நெல் சாகுபடி,நாற்று நடவுக்காக ஜூன் முதல் தேதியில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

இந்த ஆண்டு  நீர்மட்டம் இன்று ஜுன் 1 ஆம் தேதி 119 அடிவரை உயர்ந்ததால், முதல்போக விவசாயத்திற்கு ஜூன் முதல்நாள் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதுஇதையடுத்து இன்று முல்லைப்பெரியாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி, கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள ஷட்டர் (தலை மதகு) பகுதியில் நடைபெற்றது.

முன்னதாக விவசாயம் செழிக்க பிரார்த்தனை நடத்தப்பட்டது.பெரியாறு வைகை நீர்பாசன செயற்பொறியாளர் அன்புச்செல்வன் அவர்கள் சுரங்க வாய்க்கால் பகுதியிலுள்ள ஷட்டரை (தலை மதகு) இயக்கி  நெல் சாகுபடிக்காக (விவசாயத்திற்கு) 200 கன அடி நீரும், குடிநீருக்கு 100 கன அடி நீரும் சேர்த்து 300 கன அடி தண்ணீரை திறந்து விட்டார்.நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பெறுத்து 120 நாட்களுக்கு திறக்கப்படும்

விவசாயிகள் அனைவரும் தமிழகப்பகுதிக்கு வரும் தண்ணீரில் மலர்தூவி வரவேற்றனர்.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், விவசாயிகள் குறுகிய கால பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக (142 அடிக்கு) இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 204 கனஅடி  உள்ளது . அணையின் இருப்புநீர் 2,475 மில்லியன்கன அடியாக உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் இந்த ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி தண்ணீர் திறந்து இருக்கும் முதல்வருக்கு நன்றி கூறினார். மேலும் விவசாயத்திற்கு தேவையான பொருட்களான உரங்கள் மற்றும் மருந்துகள் தடையின்றி கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் விவசாயிகள் கூறுகையில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜூன் முதல் தேதியில் திறக்கப்பட்டது . இதன் மூலம் இரண்டு சாகுபடி விவசாயிகள் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கின்றது. எனவே விவசாயிகள் மகிழ்ச்சியும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

MUST READ