Homeசெய்திகள்தமிழ்நாடுஒப்பியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 210 வது பிறந்தநாள் - தமிழ்நாடு அரசு மரியாதை

ஒப்பியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 210 வது பிறந்தநாள் – தமிழ்நாடு அரசு மரியாதை

-

ஒப்பியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 210 வது பிறந்தநாள் முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்

ஒப்பியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 210 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இராபர்ட் கால்டுவெல் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை செயலாளர் சுப்பிரமணியன், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஔவை நா அருள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்

MUST READ