தொடர் விபத்தால் 30 பேர் இறப்பு- மேம்பாலம் அமைக்கக்கோரி மக்கள் மறியல்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மோச்சேரி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார்-விஜயலட்சுமி தம்பதியர், நேற்று இருவரும் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து, அவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதி கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஆகவே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து சுரங்கப்பாதை வழி அமைக்ககோரி பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைத்து இருந்தனர் மூச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள்.

இதுவரை இப்பகுதியில் விபத்தினால் 30க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இன்று வரை இதே நிலை இங்கே இருப்பதால் இதை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித பலனுமில்லை எனக்கூறும் கிராமமக்கள், விபத்தில் மூச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இதுவரை 30 பேர் இறந்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.