spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவளம் அருகே ஈச்சர் லாரி மீது  கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

கோவளம் அருகே ஈச்சர் லாரி மீது  கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

-

- Advertisement -

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது  கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகேயுள்ள செம்மஞ்சேரி குப்பம் பேருந்து நிலையம் அருகே ஈச்சர் லாரி ஒன்று பழுதாகி நின்றுகொண்டிருந்தது. அப்போது, மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையோரம் பழுதாகி நின்றிருந்த ஈச்சர் லாரி மீது மோதியது.

we-r-hiring

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முகமது (19), அஸ்ரப் அகமது(22), சுல்தான்(23), ஆசிப் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுசேரி தீயணைப்பு வீரர்கள் மற்றும் பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு விசாரணை மேறகொண்டு வருகின்றனர்.

MUST READ