Homeசெய்திகள்தமிழ்நாடுகேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 தமிழர்கள் பலி

கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 தமிழர்கள் பலி

-

கேரள மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தமிழ்நாட்டை சேர்ந்த  2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலத்தை சேர்ந்த லட்சுமணன், ராணி, வள்ளி உள்ளிட்ட 4 பேர் கேரள மாநிலத்தில் ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஷோரனூர் அருகே பாரதபுழா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தில் தண்டவாளங்களில் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் 4 பேரும் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த கேரளா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் எதிர்பாராத விதமாக அவர்கள் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே 4 பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் 3 பேரின் உடல்களை மீட்டனர். மேலும், பாரதபுழா ஆற்றில் வீசப்பட்ட ஒருவரது சடலத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரயில் மோதி 4 ஒப்பந்த பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ