Homeசெய்திகள்தமிழ்நாடு5 அர்ச்சகர்களுமே இளவயதினர்! அறநிலையத்துறையின் அலட்சியமா? மெத்தனமா?

5 அர்ச்சகர்களுமே இளவயதினர்! அறநிலையத்துறையின் அலட்சியமா? மெத்தனமா?

-

ன்

சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது . இதனால் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டினர் . அப்போது ஒரு அர்ச்சகர் குளத்தில் மூழ்கினார். அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். இப்படி ஐந்து அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த அர்ச்சகர்கள் ஐந்து பேருமே இளவயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அறநிலையத் துறையின் அலட்சியத்தாலும் மெத்தனத்தாலுமே இத்தகைய அசம்பாவிதங்கள் கோவில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

உயிரிழந்த 5 அர்ச்சகர்களுமே 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளவயதினர் என்பது மேலும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்கிறார்.

MUST READ