spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும்

500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும்

-

- Advertisement -

500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும்

மதுவிலக்கை அமல்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி வெளியிட்ட அரசாணைப் படி, நாளை 500 மதுக்கடைகளை மூட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

tasmac

இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின்போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேற்படி ஆறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20-04-2023 நாளிட்ட அரசாணை எண்.140, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.

we-r-hiring

Tasmac tamilnadu

மேற்படி, அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22-6-2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22-6-2023 முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ