Homeசெய்திகள்தமிழ்நாடுதங்க நகைக்கு 6 இலக்க பிரத்யேக குறியீட்டு எண் அவசியம்

தங்க நகைக்கு 6 இலக்க பிரத்யேக குறியீட்டு எண் அவசியம்

-

தங்க நகைக்கு 6 இலக்க பிரத்யேக குறியீட்டு எண் அவசியம்
அனைத்து தங்க நகைகளிலும் ஹால்மார்க் முத்திரையுடன் HUID எனப்படும் ஆறு இலக்க பிரத்யேக குறியீட்டு எண் அவசியமென்று இந்திய தர நிர்ணய அமைவனம் தெரிவித்துள்ளது.
தங்க நகை

இந்திய தர நிர்ணய அமைவன நிர்வாகிகள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது BIS CARE APP மூலம் HUID பயன்படுத்தி தங்கத்தின் தரம், ஹால்மார்க் முத்திரை, ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட தேதி, தங்க நகை தயாரிப்பாளரின் பெயர் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும் என்றனர்.

தங்க நகை

இதனால் நகைகளில் ஆறு இலக்கு குறியீட்டு எண்ணை பொறிக்கும் புதிய திட்டம் நாடு முழுவதும் ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வருவதாகவும் தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

HUID இல்லாமல் நகைகளை விற்பனை செய்தால் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது ஒரு வருட சிறை தண்டனை கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர் .

MUST READ