- Advertisement -
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் தீயை அணைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
ஆலையில் பணிபுரிந்த, 4 பேர் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்த சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.