Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7,006 புத்தொழில் நிறுவனங்கள் தொடக்கம்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7,006 புத்தொழில் நிறுவனங்கள் தொடக்கம்

-

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

புத்தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்து, அதிக எண்ணிக்கையில் புத்தொழில்களை உருவாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032ஆக இருந்த நிலையில், தற்போது 9,038ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 3,480 மகளிர் புத்தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. மகளிர் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 966ஆக இருந்த நிலையில், தற்போது 3 மடங்கு அதிகரித்து 4,446ஆக உயர்ந்துள்ளது

MUST READ