spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் 8 பேர் கைது- ஐ.ஜி.விளக்கம்

ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் 8 பேர் கைது- ஐ.ஜி.விளக்கம்

-

- Advertisement -

ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் 8 பேர் கைது- ஐ.ஜி.விளக்கம்

சென்னை கிண்டியில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார்.

Image
ஆருத்ரா கோல்டு ட்ரேடிங், ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி வழக்குகள் குறித்து பேசிய ஐ.ஜி.ஆசியம்மாள், “ஹிஜாவு பண மோசடி வழக்கில் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எல்.என்.எஸ். மோசடி தொடர்பாக 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.9.82 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா மோசடி வழக்கில் 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.

ஐ.எப்.எஸ்.நிதி நிறுவன மோசடி செய்த வழக்கில் திருச்சியில் 17-வது வார்டு கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் கிளை பொறுப்பாளர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் நிதி நிறுவன மோசடி வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம். முக்கிய வழக்குகளான ஆருத்ரா கோல்ட் டிரேடிங், ஹிஜாவு அசோசியேட்ஸ், LNS – IFS, AMRO KINGS, CVRS நிதி நிறுவனங்கள் மோசடிகள் மீதான புலன் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

MUST READ