spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்ல 3 நாட்களுக்கு தடை விதிப்பு

தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்ல 3 நாட்களுக்கு தடை விதிப்பு

-

- Advertisement -

உதகை தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்லும் சாலையில் சோதனைச்சாவடி அமைக்கும் பணிகள் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

we-r-hiring

நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும், தென்னிந்தியாவின் 2வது உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் உள்ள காட்சி முனையை கண்டு ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். குறிப்பாக சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டாவிற்கு சென்று நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வானுயர்ந்த மலைத் தொடர்களையும், பச்சை பசேல் என காட்சியளிக்கும் இயற்கை வளங்களையும், அணைகளையும் கண்டு ரசிப்பது வழக்கம்.

இந்த நிலையில் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பாஸ்ட் ஸ்டேக் நுழைவு கட்டண சோதனை சாவடியின் இருபுறமும் ஏற்பட்டு வந்த போக்குவரத்து பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாஸ்ட் ஸ்டேக் மற்றும் சோதனை சாவடியை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதேபோல் சோதனைச்சாவடிக்கு தரைக்கீழ் கேபிள் ஓயர்கள் அமைக்கும் பணிகளும், சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

தொட்ட பெட்டா

இந்த நிலையில் நுழைவு கட்டணம் மற்றும் சோதனை சாவடி அமைப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

MUST READ