கரூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் நான்கு இடங்களில் நவீன வசதியியுடன் ரெட் லைட் ஏரியா போல ரூ1000 முதல் 3500 வரை இளம் வயது பெண்களுக்கு ஏற்ப வசூல் செய்து Happy Ending என்ற கோர்டு வேர்டுடன் அறைக்குள் அழைத்துச் செல்லும் உட்சக்கட்ட சட்டவிரோத செயல் அமர்க்களமாக நடந்து வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு…
கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள கட்டடத்தில் காவல்துறை நல் ஆசியோடு அச்சமின்றி நடந்து வரும் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருகிறது என வீடியோ மற்றும் ஆதாரத்தோடு வழக்கறிஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
கரூரில் அரசு பள்ளி அருகில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த வழக்கறிஞர் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் நீளம் ரகுவரன் இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த அவர் கரூரில் ஸ்பா என்ற பெயரில் அரசுப் பள்ளி அருகிலும் பல்வேறு இடங்களிலும் பாலியல் தொழில் நடைபெறுவதாக புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் லோட்டஸ் ஸ்பா இயங்கி வருகிறது. அங்கு செல்லும் ஆண்களிடம் அங்கு பணியில் இருக்கும் பெண்கள் மசாஜ்க்கு 1000 ரூபாயும், Happy Ending-க்கு 1000 ரூபாயும் வசூலித்து வருகின்றனர். Happy Ending தொகை ரூமுக்குள் சென்றவுடன் அங்குள்ள பெண்ணிடம் கொடுக்க வேண்டும். Happy Ending என்றால் பாலியல் ரீதியான சந்தோசத்தை கொடுப்பது என்று கூறப்படுகிறது.
அது குறித்து வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், அங்கு 4 இளம் பெண்கள் உள்ளனர். அந்த பெண்களை அங்கு வரும் ஆண்கள் முன் நிறுத்தி, எந்த பின் பிடிக்குமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது.
மேலும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாலை பள்ளி முடித்து வரும் போது, அங்கு வரும் ஆண்கள் ஸ்பாவில் இருந்து, மாணவிகளை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். ஸ்பா அமைந்துள்ள இடம் கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்து மிக அருகில் அமைந்துள்ளது. ஆனால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதே போன்ற ஸ்பா கரூர் மாநகருக்கு உட்பட்ட எல்லையில் நான்கு அமைந்துள்ளது. அனுமதி பெற்ற ஸ்பாவில் கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தெரப்பி படித்து பயிற்சி பெற்றவர்கள் பணி புரிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால், இங்கு சட்டவிரோதமாக ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வருகிறது.
சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பாவை இழுத்து மூடி, அதை நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கண்டுகொள்ளாத காவல்துறையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததோடு, வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மதுரை : டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி – வைகோ கண்டனம்!