spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிடீரென தீப்பிடித்து எரிந்த கார்- நூலிழையில் தப்பிய உயிர்கள்

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்- நூலிழையில் தப்பிய உயிர்கள்

-

- Advertisement -

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்- நூலிழையில் தப்பிய உயிர்கள்

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அவிநாசியை கடந்து சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து கார் முற்றிலும் சேதமடைந்தது.

fire2

ஈரோடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை விமான நிலையம் செல்வதற்காக நள்ளிரவில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் ஓட்டி வந்து கொண்டிருந்த டஸ்டர் காரின் முன்பகுதியிலிருந்து புகை வந்ததை தொடர்ந்து திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியுள்ளது. உடனே காரில் வந்தவர்கள் காரிலிருந்து இறங்கினர்.

we-r-hiring

தொடர்ந்து உடனடியாக அவிநாசி தீயணைப்புதுறை மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ரேடியேட்டரில் தண்ணீர் இல்லாமல் நீண்ட தூரம் ஒட்டி வந்ததால் சொகுசு கார் முன்பகுதில் நெருப்பு பற்றிக்கொண்டது. இதனால் சொகுசு கார் எரிந்து முழுவதும் சேதமடைந்தது. அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து அவிநாசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ