பூட்டியிருந்த வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து
அரகண்டநல்லூர் அருகே பூட்டி இருந்த வீட்டிலிருந்த பிரிட்ஜ் தீப்பிடித்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(59) என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பயண சீட்டு பரிசோதராக பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி உயிரிழந்த விட, சீனிவாசனின் இரண்டு மகன்கள் சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சீனுவாசன் மணம்பூண்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சீனிவாசன் வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டிலிருந்து கருகிய புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், வீட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பிரிட்ஜினை அனைத்தனர்.
பிரிட்ஜ் தீப்பிடித்து எறிந்ததன் காரணமாக வீடு முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. மேலும், வெப்பம் வெளியேற வழி இல்லாத காரணத்தினாலும், வீட்டின் சுவர் முழுவதிலும் அனல் ஏறியதாலும் வீட்டின் உள் பகுதியில் ஆங்காங்கே மேற்பகுதியில் பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தின் பொழுது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து தீயணைப்புத்துறையினரும் அரகண்டநல்லூர் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
