சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிசோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுரிகளில் நடைபெற்று வரும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அனைத்து மாநில அரசு அலுவலங்கள், நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையி ல் வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாகச் அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிசோர் தெரிவித்துள்ளார்.