Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக தொழில் துறைக்கு பேரடி? பரந்தூர் ஏர்போர்ட் விவகாரத்தில் திமுக எடுத்த 'திடீர்' முடிவு!

தமிழக தொழில் துறைக்கு பேரடி? பரந்தூர் ஏர்போர்ட் விவகாரத்தில் திமுக எடுத்த ‘திடீர்’ முடிவு!

-

- Advertisement -

பரந்தூர் இரண்டாம் கட்ட பன்னாட்டு விமான நிலைய திட்டத்தைக் கைவிட்டால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கும் என்றும், மாநிலத்தின் பொருளாதார எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் திமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.தமிழக தொழில் துறைக்கு பேரடி? பரந்தூர் ஏர்போர்ட் விவகாரத்தில் திமுக எடுத்த 'திடீர்' முடிவு!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தின் அவசியம் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

we-r-hiring

அரசியல் காரணங்களுக்காக திட்டத்தை முடக்குவதா?
அவைத் வெளிநடப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தங்கம் தென்னரசு பேசியதாவது:

  • தொழில் வள இழப்பு: பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக நீர்த்துப்போகச் செய்தால், தமிழகத்திற்கு வரவிருக்கும் மிகப்பெரிய தொழில் முதலீடுகளும் தொழில் வளங்களும் கைவிட்டுப் போகும்.
  • ஓசூர் கசப்பான அனுபவம்: ஏற்கனவே ஓசூர் விமான நிலைய திட்டத்தை நாம் இழந்துவிட்டோம். தற்போது பரந்தூர் திட்டத்தையும் கைவிட்டால், அது மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை அடிமட்ட அளவில் பாதிக்கும்.
  • மக்கள் நலன் பாதிப்பு: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செயல்படுத்தப்படும் இதுபோன்ற முடிவுகள், அல்டிமேட்டாக நாட்டின் பொதுமக்களையே கடுமையாகப் பாதிக்கும்.

பேரவையில் குரலெழுப்ப மறுப்பு
மாநிலத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் குறித்து பேரவையில் காரசாரமாக விவாதிக்க திமுக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. இருப்பினும், அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி வழங்காததால், எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் வெளிநடப்பு செய்ததாக அவர் தெரிவித்தார்.  பரந்தூர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தாவிட்டால் தமிழ்நாடு பெறவிருக்கும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை அண்டை மாநிலங்கள் தட்டிச் சென்றுவிடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.

பரந்தூர் திட்டம் கைவிட்டு அறிவிப்பு: சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு – சபாநாயகருடன் காரசார விவாதம்

MUST READ