Homeசெய்திகள்தமிழ்நாடு13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

-

- Advertisement -

கோவை மாவட்டம் சூலூரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 40 வயது நபரை போலீசார், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த 40 வயதான சிவகுமார் என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர்  சிவகுமாரை கைது செய்தனர்.

13 வயது பள்ளி சிறுமி பலாத்காரம்: முன்னாள் நாதக நிர்வாகி உட்பட 8 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு

இந்நிலையில், சிறுமி பாலியல் வழக்கில் கைதான சிவகுமார் மேல் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் .

MUST READ