spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஇரண்டு ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம்

இரண்டு ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம்

-

- Advertisement -

2022-இல் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கின் குற்றவாளி என தீர்பளித்த சதீஷுக்கு இன்று அல்லி குளம் மகளீர் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இரண்டு ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் எனும் இளைஞர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி ஸ்ரீதேவி, “வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்தார். சதீஷூக்கான தண்டனை விவரங்கள் வரும் 30ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். சென்னையில் பரபரப்பு மிகுந்த பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இன்று குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிவு -NIC விளக்கம்

we-r-hiring

MUST READ