- Advertisement -
வேலூரில் லைக்ஸ் வாங்க இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பைக் சாகசம் செய்யும் ரீல்ஸ் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பெண் போல சேலை உடுத்தி, தலையில் பூ வைத்து அலங்காரம் செய்துகொண்டு, ஹெல்மெட் அணியாமல், கல்லூரி பெண்கள் செல்லும் சாலைகளில் பயணிக்கிறார்.
இந்த விடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது தவறான முன்னுதாரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பொது மக்களுக்கு முன்னிலையில் வேகமாக செல்வதால் அவர்களுக்கு இடையூறினை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போக்குவரத்து போலீசாரிடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
