spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசொகுசு காரில் கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு...கடலூரில் பரபரப்பு சம்பவம்!

சொகுசு காரில் கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு…கடலூரில் பரபரப்பு சம்பவம்!

-

- Advertisement -

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சொகுசு காரில் கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு செய்யப்பட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமத்தில் வீடு ஒன்றை எடுத்து அதில் மருந்துக்கடை நடத்தி வந்தார். இந்த மருந்துக்கடையில் அசகளத்தூரை சேர்ந்த கவுதமி என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், மணிவண்ணன் தனது மருந்துக் கடையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதாக வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தலைமை மருத்துவர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் பேரில் அங்கு சென்று சோதனை செய்த போது அங்கு கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மருந்துக்கடைக்கு வெளியே நின்ற சொகுசு காரை சோதனை செய்ததில் அதில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என கண்டறியும் கருவி இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மணிவன்னன் மற்றும் கவுதமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அதில், இவர்கள் கருவில் இருக்கும் குழந்தையை கண்டறிந்து அது பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்தது. மேலும் சட்டவிரோதமாக பல்வேறு கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக தினேஷ், கண்ணதாசன் ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து மணிவண்ணன், கவுதமி, தினேஷ், கண்ணதாசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகள், கார், கருவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

MUST READ