spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்லி கணேஷ் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் இரங்கல்  

டெல்லி கணேஷ் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் இரங்கல்  

-

- Advertisement -

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு, நடிகரும், மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லி கணேஷ்

we-r-hiring

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். டெல்லி கணேஷ் நகைச்சுவையை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர் என்றும், அவரது இடத்தை ஈடு செய்வது எளிதல்ல என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பயனுக்காக ஏஐ படிக்க சென்ற கமல்ஹாசன்!

மேலும், அவரோடு தான் செலவிட்ட தருணங்கள் இனியவை; நினைவில் நிற்பவை என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். அண்ணன் கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டுள்ள கமல்ஹாசன், அவர் மீது பற்று கொண்ட திரையுலக நண்பர்களின் வேதனையை தாம் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

MUST READ