spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க.வுக்கு கருணாஸ் ஆதரவு!

தி.மு.க.வுக்கு கருணாஸ் ஆதரவு!

-

- Advertisement -

 

தி.மு.க.வுக்கு கருணாஸ் ஆதரவு!

we-r-hiring

மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் தனது ஆதரவை உறுதிக் கடிதம் மூலம் தெரிவித்துக் கொண்டார்.

ரூபாய் 50,000- ஐ நெருங்கும் தங்கம் விலை!

இது குறித்து முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், நடிகருமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அடிமை அ.தி.மு.க.வை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்க வேண்டும்.

மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க ‘இந்தியா கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் தி.மு.க.வை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது

இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகி விடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அ.தி.மு.க.வை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.

சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

தி.மு.க.விற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக் கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய தி.மு.க.விற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அ.தி.மு.க.வை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ