மாலத்தீவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – ஜூலை 20 முதல் விண்ணப்பம்
‘ஜெயிலர்’ மற்றும் ‘லால் சலாம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் முடித்துக் கொண்டார். இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 10- ஆம் தேதி அன்று ‘ஜெயிலர்’ உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் ரஜினிகாந்த், சில நாட்கள் ஓய்வெடுப்பதற்காக, சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்தில் மாலத்தீவுக்கு சென்றார். இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பதிவிட்டுள்ளது.
காமராஜர் பிறந்தநாள்- தலைவர்கள் மரியாதை
அதில், தங்களது நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்த நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நடிகர் ரஜினிகாந்துடன் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.