spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுறநகர் ரயில் சேவைகள் ரத்து- கூடுதலாக மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கம்!

புறநகர் ரயில் சேவைகள் ரத்து- கூடுதலாக மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கம்!

-

- Advertisement -

 

we-r-hiring

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவைகள் இன்று (பிப்.18) ரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் லைலா’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 44 புறநகர் மின்சார ரயில்களை இன்று (பிப்.18) முழுமையாக ரத்துச் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று (பிப்.18) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.15 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பராமரிப்புப் பணிகள் நடப்பதால், மேற்கண்ட புறநகர் மின்சார ரயில்கள் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை புறநகர் ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இன்று (பிப்.18) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை பச்சை வழித்தடம், நீல நிற வழித்தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!

இரவு 08.00 மணி முதல் நள்ளிரவு 11.00 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில், அதாவது ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். சென்னை மாநகர பேருந்துகளில் பயணித்து, சென்னை சென்ட்ரல், திருமங்கலம், விம்கோ நகர், அசோக் நகர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சென்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ