Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க.வில் பிப்.21 முதல் விருப்ப மனு விநியோகம்!

அ.தி.மு.க.வில் பிப்.21 முதல் விருப்ப மனு விநியோகம்!

-

- Advertisement -

 

அதிமுக முடிவு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, அ.தி.மு.க.வில் வரும் பிப்ரவரி 21- ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

‘தமிழ்நாடு பட்ஜெட் 2024’: மாபெரும் 7 தமிழ்க்கனவு- பட்ஜெட் சாராம்சம்!

இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 21- ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பிப்ரவரி 21- ஆம் தேதி முதல் மார்ச் 01- ஆம் தேதி வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 40 தொகுதிகளுக்கான விருப்ப மனு பெறலாம்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

அ.தி.மு.க. சார்பில் பொதுத்தொகுதியில் போட்டியிட ரூபாய் 20,000 அளித்து விருப்ப மனுக்களைப் பெறலாம். தனித்தொகுதியில் போட்டியிட ரூபாய் 15,000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெறலாம். உரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்திச் செய்து வழங்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ