Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

-

- Advertisement -

 

ஆளுநர் தனது பதவியை ராஜினாமா

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (பிப்.19) திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2024 இன்று தாக்கலாகிறது!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து கார் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தமிழ்நாடு பட்ஜெட் 2024’: மாபெரும் 7 தமிழ்க்கனவு- பட்ஜெட் சாராம்சம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையைப் படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

MUST READ