Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

-

 

பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
Photo: ADMK

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (ஜூலை 16) காலை 11.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாநாட்டு ஏற்பாடு பணிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஒன்பது குழுக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெறவுள்ள அ.தி.மு.க.வின் மாநாட்டிற்கான ஏற்பாடுகள், மாநாட்டில் பங்கேற்போருக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள், மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைக் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

MUST READ