Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜயவாடா பயணம்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜயவாடா பயணம்!

-

- Advertisement -

 

"மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது"- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
Video Crop Image

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர மாநிலம், விஜயவாடாவிற்கு சென்றுள்ளார். விஜயவாடாவில் உள்ள பிரசித்திப் பெற்ற துர்கா மல்லேஸ்வர சுவாமி திருக்கோயிலில் அவர் வழிபாடு நடத்தவுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

we-r-hiring

பள்ளி மைதானத்தில் பள்ளம் – 2 மாணவிகள் பலி

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயவாடாவுக்கு சென்றுள்ளார். கோயிலில் தரிசனம் செய்த பிறகு இன்று இரவே எடப்பாடி பழனிசாமி மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார்.

பா.ஜ.க.வில் இருந்தும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் அ.தி.மு.க. விலகியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

காவிரி விவகாரம்: போராட்டத்தை அறிவித்த நாம் தமிழர் கட்சி!

இந்த சூழலில், அவர் ஆந்திராவில் உள்ள கோயிலுக்கு வழிபாடு நடத்தச் சென்றிருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

MUST READ