
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இன்று (செப்.24) மாலை 05.00 மணிக்கு தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “இந்திய நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். தி.மு.க. அரசின் சாதனைகளை வாக்காளர்களிடம் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அளிக்கும் மக்கள் கோரிக்கைகளை எம்.எல்.ஏ., அமைச்சர் நிறைவேற்ற வேண்டும்.
மத்திய இரண்டாவது முறையாக ஆட்சி செய்யும் பா.ஜ.க., மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வராது. கவலையின்றி மக்களைச் சந்தியுங்கள்; யாரும் நம்மை நிராகரிக்க மாட்டார்கள். இதுவரை அளிக்க வாக்குறுதிகளில் எதையாவது பா.ஜ.க. நிறைவேற்றி உள்ளதா? சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்ற வாக்குறுதியைக் கூட பா.ஜ.க. நிறைவேற்றவில்லை.
பா.ஜ.க. டிசைன் டிசைன் ஆக அளித்த வாக்குறுதிகள் எல்லாம் பத்திரமாக ஆவணங்களாக உள்ளது. மத்திய அரசு சாதனைகள் எதுவும் செய்யாததால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க. தமிழ்நாட்டில் டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சி என்பதை நிரூபிப்போம். நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் வெல்ல உழைப்போம்.
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கொச்சி பொய் டெல்லி சென்றதன் மர்மம் என்ன?, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை என்ன கனவுடன் ஆதரிக்கிறார் எடப்பாடி பழனிசாமி? அ.தி.முக.வும், பா.ஜ.க.வும் சண்டைப் போடுவது போன்று நடிக்கின்றன” என்று குற்றம்சாட்டியுள்ளார்.


