spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநவம்பர் 6-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

நவம்பர் 6-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

-

- Advertisement -

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலகம்

we-r-hiring

இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், நவம்பர் 6 புதன் கிழமை காலை 10 மணிக்கு, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த, மாநிலக் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில
செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக  பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ