spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் ஏப்.5 முதல் விநியோகம்

அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் ஏப்.5 முதல் விநியோகம்

-

- Advertisement -

அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் ஏப்.5 முதல் விநியோகம்

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி, அதிரடி அறிவிப்புடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுக

அதில், “அதிமுக உறுப்பினர்களாக உள்ளவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைப்படி, அதிமுக உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் வரும் 5.4.2023 புதன்கிழமை முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும்.

we-r-hiring

அதிமுக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து ஒரு உறுப்பினருக்கு ரூ.10 வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ