spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

-

- Advertisement -

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது.

we-r-hiring

அப்போது மனு மீது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தனர். அதிமுக, ஈபிஎஸ் உள்ளிட்ட எதிர் மனுதாரர்களிடம் விளக்கம் கோராமல் தீர்மானத்துக்கு தடை விதிக்கமுடியாது என்றும் நீதிபதி கூறினார்.

மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவில், ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யவேண்டும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MUST READ