spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"கூட்டணி குறித்த யூகங்களை நம்ப வேண்டாம்"- பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

“கூட்டணி குறித்த யூகங்களை நம்ப வேண்டாம்”- பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"கூட்டணி குறித்த யூகங்களை நம்ப வேண்டாம்"- பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

we-r-hiring

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த யூகங்களை நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி விஷ்வகுருவா? மவுனகுருவா?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்று (மார்ச் 16) வெளியாக உள்ள நிலையில், அ.தி.மு.க. தலைமை கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை இருதரப்பு நிர்வாகிகளும் இன்று (மார்ச் 16) மாலை 05.00 மணிக்கு மேற்கொள்ளவுள்ளனர்.

கோயில் உண்டியலை உடைத்த இருவர் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, இன்றே தே.மு.தி.க.விற்கான தொகுதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளி வருகிறது. தலைமைக் கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ