குற்றால அருவிகளில் நீர்வத்து சீரானதால் அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை பரவலாக கனமழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததால் தற்போது அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐய்யப்ப பக்தர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும், தொடர் விடுமுறையை ஒட்டி குற்றால அருவிகளில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் காணப்பட்டது.