Homeசெய்திகள்தமிழ்நாடுஅம்பேத்கர் படம்- தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு!

அம்பேத்கர் படம்- தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு!

-

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதலமடைந்த மருத்துவமனை கட்டடம்- நீதிபதிகள் அதிரடி உத்தரவு!

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்திப் பரவியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவைச் சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தலைமை நீதிபதியிடம் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் எனத் தெரிவித்தார்.

கனரக லாரி மோதிய விபத்தில் 5 மாடுகள் உயிரிழப்பு!

இத்தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ