spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎதிர்க்கட்சி என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது- டிடிவி தினகரன்

எதிர்க்கட்சி என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது- டிடிவி தினகரன்

-

- Advertisement -

எதிர்க்கட்சி என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது- டிடிவி தினகரன்

பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேரில் ச ந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Image

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தேர்தல் நேரத்தில் எல்லா குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொல்லிவிட்டு, இப்போது குடும்பத் தலைவிகளுக்காக இவர்கள் விதித்துள்ள தகுதிகளையே தமிழகம் ஆச்சரியமாக தான் பார்க்கிறது. செந்தில் பாலாஜிக்கு சிறை துறை அனுமதிக்கும் வசதிகளை தான் அவர் பெற முடியும். எதிர்க்கட்சி என்பதற்காக எதையும் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது . சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பரந்தூர் விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் கோரிக்கை.

we-r-hiring

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை சந்தி சிரிக்கிறது. காவல்நிலையங்களிலேயே மரணங்கள் நிகழ்கின்றன. படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி, அவர்கள் தான் எங்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேர வேண்டும்” என்றார்.

MUST READ