Homeசெய்திகள்தமிழ்நாடுகாஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் தரை இறங்கிய ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு  

காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் தரை இறங்கிய ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு  

-

- Advertisement -

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் வயல்வெளியில் அவசரமாக தரையிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பொறுப்பந்தல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இன்று வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென வெயல் வெளியில் தரை இறங்கியது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஹெலிகாப்டரை காண குவியத் தொடங்கினர். இதனால் அந்த பகுதிக்கு போலிசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர், ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் என்பது தெரியவந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதும் தெரியவந்தது. சிறிது நேரத்தில் பழுது சரிசெய்யப்பட்டு  ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.

முன்னதாக கடந்த மாதம் சாலவாக்கம் பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. சுமார் 3 மணி நேரம் கழித்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

MUST READ