- Advertisement -
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு, பதிலளிக்கும் விதமாக, “தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம்” என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளாா்.
3வது மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் கூறியுள்ள நிலையில், வீண் வாதத்துக்காக நம் மீது ஏதாவது ஒன்றை திணிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம் சாட்டியுள்ளாா். மேலும்,தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம். இந்த மொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் உலகளாவிய சாதனைகள் புரிந்துவருவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா்.


