spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்!"- அன்புமணி ராமதாஸ் எம்.பி. ட்வீட்!

“நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்!”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. ட்வீட்!

-

- Advertisement -

 

"நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்!"- அன்புமணி ராமதாஸ் எம்.பி. ட்வீட்!
File Photo

பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22- ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

we-r-hiring

இலாகா இல்லாமல் பதவியில் நீடித்த தலைவர்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இந்த நிலையில், பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.

கிராமி விருதுப் பெற்ற பாடகியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல்!

புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

MUST READ